திங்கள், 28 மார்ச், 2016

AVINANGUDI BUS STOP TIMINGS

ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்துகள்
புறப்படும் நேரம் AVINANGUDI BUS STOP TIMINGS
கடலுார் CUDDALORE  http://neivasal606111.blogspot.com              
00.35,01.20,02.25,03.25,05.55,06.05,07.40,08.40,09.40,09.55,
10.25,10.35,11.10,11.35,11.50,12.20,12.55,13.30,14.05,14.20,
14.45,15.05,15.50,16.05,16.25,16.35,16.50,17.05,17.35,18.05,
18.35,18.50,19.05,19.35,19.50,20.05,20.20,20.50,21.35,21.50,
22.20,22.35,23.15

திருச்சி TRICHY http://neivasal606111.blogspot.com
00.01,00.10,00.25,00.50,01.20,05.05,05.10,05.50,06.20,07.00,
07.05,07.30,08.30,08.50,09.20,09.50,10.00,10.10,10.20,10.45,
11.00,11.05,11.20,11.40,12.30,12.50,13.30,14.20,14.35,15.00,
15.10,15.30,16.00,16.20,16.35,16.50,17.50,18.10,18.50,19.30,
19.50,20.30,21.10,22.10,22.50

சென்னை CHENNAI http://neivasal606111.blogspot.com
04.35,06.00,07.20,08.05,09.50,12.05,13.05,14.05,14.50,21.35,
22.05,23.05

சிதம்பரம் CHIDAMBARAM   06.20,13.35,20.35
                                 http://neivasal606111.blogspot.com                             








ஞாயிறு, 27 மார்ச், 2016

TITTAKUDI BUS STAND TIMINGS

திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து  
பேருந்துகள் புறப்படும் நேரம் 
TITTAKUDI BUS STAND TIMINGS
அரியலூர் (மார்க்கம்) 
05.15,05.50,06.10,06.50,08.45,12.30,13.20,14.20,16.10,18.00,
18.45,21.30,22.00 

            http://neivasal606111.blogspot.com            
குன்னம் (மார்க்கம்) http://eraiyur606111.blogspot.com
04.45,05.00,07.00,07.15,11.30,12.15,13.30,14.15,18.45,19.00

திட்டக்குடி இருந்து திருப்பதி       19.45
TITTAKUDI TO TIRUPATHI http://neivasal606111.blogspot.com
திருப்பதி இருந்து திட்டக்குடி       05.45

திட்டக்குடி இருந்து பழனி PALANI    07.05
TITTAKUDI TO PALANI http://neivasal606111.blogspot.com
பழனி PALANI இருந்து திட்டக்குடி    14.05 

பெங்களூர் BANGALORE                         20.45

சேலம் SALEM                      16.30

திங்கள், 13 அக்டோபர், 2014

பூமாலையப்பர்

   சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகி, இடையில் பல ஓடைகளையும் சிற்றாறு களையும் இணைத்துக்கொண்டு கடலூர் அருகே பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது வெள்ளாறு. இந்த ஆற்றின் இரு கரைகளிலும் சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளன. அத்தகைய ஆலயங்களில் ஒன்றுதான் நெய்வாசல் பூமாலையப்பர், முத்துக்கருப்பையா திருக்கோவில்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாறு தனது போக்கை மாற்றிக்கொள்ள, ஆறு புதிதாக சென்ற இடத்தின் வடகரையில் நெய்வாசல் என்ற ஊரும், தென்கரையில் சன்னாசி நல்லூரும் உருவான தாகச் சொல்லப்படுகிறது. இந்த ஊர்களின் எல்லையில் தென்மேற்கிலிருந்து வரும் சின்னாறு வெள்ளாற்றில் கலக்கிறது. இவ்விரண்டும் சேருமிடம் கூட்டாற்று மூலை எனப்படுகிறது. இவ்விடத்தில்தான் பூமாலை யப்பர் கோவில் அழகுற அமைந்துள்ளது.

இக்கோவிலில் பூமாலை யப்பர், செம்மலையப்பர் (இவ்விருவரும் சகோதரர்கள்), முத்துக்கருப்பன் ஆகியோர் பிரதான தெய்வங்களாகத் திகழ, கொங்கா கருப்பு, சித்தாநாதர், குள்ள கருப்பு, பச்சையம்மன், முருகன் போன்றோர் பரிவார தெய்வங்களாகவும்; கோவிலுக்கு வெளிப்புறம் காவல் தெய்வமாக வீரனார் சாமியும் இருக்கின் றனர். அக்கரையில் அமைந்துள்ள சன்னாசி நல்லூரிலும் இதே பெயரில் கடவுள்கள் இருக்கின்றனர்.

சன்னாசி நல்லூர், நெய்வாசல், காளிங்கராய நல்லூர் என அப்பகுதியி லுள்ள காவல் தெய்வங்க ளெல்லாம் இரவு நேரங்க ளில் நட்பு முறையில் ஒன்றுகூடுவது வழக்கமாம். கூட்டாற்று மூலைவெளியில் கையில் தீவட்டிகளோடு, பரிவார தெய்வங்கள் கூடி சந்தோஷக்களிப்புடன் ஓடியாடி விளையாடுவார் களாம். இரவு நேரங்களில் வாய்க்கால் காவலுக்கு, நீர் பாய்ச்சுவதற்குச் சென்றவர்கள் இந்த அரிய காட்சி யைக் கண்டு மெய் சிலிர்த் துப் போயுள்ளனர்.

இக்கோவிலில் உள்ள ஏழு மீனவர்களின் சிலை இந்த தெய்வங்களை நேரில்  கண்டதற்கான சாட்சியாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்ச்சி குறித்து விவரித்தார்கள் இவ்வாலய பரம்பரை அறங் காவலர்களான பன்னீர் செல்வமும், செல்வராசும்.

""பெண்ணாடத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் அதிகாலை என எண்ணிக்கொண்டு இரவு நேரத்திலேயே கூட்டாற்று மூலைக்கு மீன்பிடிக்க வந்துவிட்டனர். இரு ஆறுகளும் ஒன்று சேருமிடம் என்பதால் அங்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும்.

அந்த சமயம் வேட்டைக்காகவும், விளையாட வும் வந்த தெய்வங்கள் இவர்களைப் பார்க்க, மீனவர்களும் தீவட்டியுடன் இருக்கும் தெய்வங்களைப் பார்த்துவிட்டனர். "நாம் விளையாடும் இடத்தில் இந்த இரவு வேளையில் வந்து நிற்கிறார்களே' என்று தெய்வங்கள் கோபம் கொள்ள, மீனவர்களின் பார்வை பறிபோய்விட்டது. இரவு முழுக்க அங்கேயே கண் தெரியாமல் அவர்கள் தடுமாறித் தத்தளித்தனர். தங்கள் பார்வை பறிபோனதற்கு தெய்வ கோபம்தான் காரணம் என்பதை உணர்ந்து, "நாங்கள் அறியாமல் உங்கள் வழியில் குறுக்கிட்டுவிட்டோம். இனி இதுபோன்று ஒருபோதும் வரமாட்டோம். எங்களுக்கு கண் பார்வையைத் திருப்பிக் கொடுங்கள்' என கதறியழுதனர். தெய்வங்கள் மனமிரங்கி அந்த ஏழு மீனவர்களுக்கும் கண் பார்வையைத் திரும்பக் கொடுத்தனர். இதன் நினைவாகவே அந்த மீனவர்களின் வாரிசுகள்

அவர்களது சிலைகளை கோவிலில் நிறுவியுள் ளனர். இன்றும் அவர்களது வாரிசுகள் இங்கு வந்து பூமாலையப்பரை வணங்கிச் செல்வதோடு, ஆண்டுக்கு ஒருமுறை புது மீன் வலையை காணிக்கையாகச் செலுத்திச் செல்கின்றனர்'' என்றனர்.

பூமாலையப்பர், செம்மலையப்பர் போன்றே முத்துக்கருப்பனும் மகிமை யுடன் திகழ்கிறார். முரட்டு மீசை, கையில் துப்பாக்கி, மருளச் செய்யும் விழி களோடு கம்பீரமாக நிற்கும் முத்துக்கருப்பன், தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கிறார். ""சொத்தை இழந்தவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், பிள்ளைப் பேறு இல்லாத வர்கள், பொருட்களைக் களவு கொடுத்தவர்கள் இவரிடம் வந்து பிராது கொடுத்தால் பிரச்சினை தீரும். களவுபோன பொருள் திரும்பக் கிடைக்கும். ஆயிரக்கணக்கான பேர் இவரிடம் முறையிட்டுப் பலனடைந்திருக்கின்றனர்'' என்கிறார்கள் பக்தர்களான களத்தூர் துரைசாமி- பவுனாம்பாள் தம்பதியினர்.

கோவிலுக்கு முன்னால் ஐம்பது மீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக நிற்கிறார் வீரனார். மக்கள் முதலில் தீபம் ஏற்றி இவரை வணங்கிய பிறகே கோவிலுக்குள் நுழைகின்றனர். மேலும் கோவில் திருவிழா, சாமி புறப்பாடு போன்ற சமயங்களிலும் இவருக்கே முதலில் தீப வழிபாடு செய்யப்படுகிறது. சாதிபேதங்களை நீக்குவதிலும் இக்கோவில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

""வீரனாருக்கு எங்கள் முன்னோர்களான தலித் மக்கள்தான் பூசாரிகளாக இருந்துவந்தனர். அந்த வழியில் நான் இப்போது பூஜை செய்கி றேன். வெளியூரிலிருந்துகூட, மக்கள் இங்கு வந்து எந்தப் பாகுபாடுமின்றி ஐயனாரை வழிபடுகிறார்கள்'' என்கிறார் அம்பேத்கர்.

சேலம், நாமக்கல், தஞ்சை, நாகை, திருச்சி, பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் இங்குவந்து வழிபடுகின்றனர். திங்களும், வெள்ளியும் இங்குள்ள தெய்வங்களை வணங்க உகந்த நாட்களாகும்.

ஆற்றையொட்டி இருபது ஏக்கர் நிலப்பரப் பில் வேம்பு, கருவேலம் மற்றும்  இன்ன பிற மரங்கள் சூழ்ந்த இடத்தில் அழகுற அமைந் துள்ளது இக்கோவில். தெய்வக் குற்றமாகி விடுமென்பதால், இப்பகுதியில் அடுப்பெரிக் கவோ, வீட்டு உபயோகத்துக்கெனவோ மக்கள் மரங்களை வெட்டமாட்டார்கள். நூற்றாண் டுப் பழமைவாய்ந்த மரங்கள் உள்ளன. அற்புத மான இந்த இயற்கைச் சூழலில் மான்களும் மயில்களும் நடமாடுவதை நாம் சாதாரணமாகக் காணலாம். இக்கோவிலுக்கு வருகை தருவதே மனதுக்கு நிறைவான அமைதியை அளிக்கும்.

விருத்தாசலம்- தொழுதூர் நெடுஞ்சாலையில் ஆவினங்குடி பஸ் நிறுத்தத்திலிருந்து தென் கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பூமாலையப்பர் கோவில் அமைந்துள்ளது. சென்றுவர வாகன வசதிகள் உள்ளன.
கடலூர் மாவட்டம்,திட்டக்குடி வட்டம்,நெய்வாசல்